இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான நிலையில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒரு நாள் போட்டிகள், 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் இன்று வரை மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வர நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் நேற்று தன்னுடைய பிறந்தநாள் அன்று ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.