
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன்னுடைய கட்சியின் பெயரை பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி என்று மாற்றி தேர்தல் ஆணையத்திடமும் ஒப்புதல் வாங்கி விட்டார். இவர் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள twitter பதிவில், பிரிவினைவாத அரசியலை எதிர்த்து போராடவும், தெலுங்கானா மக்களுக்கு சேவை புரியவும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Heartiest Birthday Greetings to Hon'ble @TelanganaCMO Thiru. K.Chandrasekhar Rao Garu.
Wishing you a long and healthy life in service of the people of Telangana and in fighting divisive politics.
— M.K.Stalin (@mkstalin) February 17, 2023