
பொதுவாகவே உணவுகளில் பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பலரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் பக்கெட் பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது சுட சுட பிரியாணியை பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அடைத்து வைத்து வாங்கி வந்து உண்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளனர்.
சூடாக இருப்பதால் பிரியாணி வழங்கப்படும் பட்கெட்டுகளில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் உருகி உணவில் கலந்து விடும். அதனை உண்பது விஷத்திற்கு சமம் என்று எச்சரித்துள்ளனர். பிளாஸ்டிக்கில் உள்ள டாக்ஸின் என்ற ரசாயனம் உணவில் கலப்பதால் வயிற்று கோளாறு, பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்