மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அவர் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவதுஅமைச்சர் ஜெய்சங்கர் காரில் சென்று கொண்டிருந்தபோது காலிஸ்தான் பயங்கரவாதிகள் காரை மறித்து அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர்.

அதோடு அமைச்சர் முன்பாகவே இந்திய தேசிய கொடியை அவர்கள் கிழித்தனர். அவர்களை பிரிட்டன் காவல் துறையினர் தடுத்த நிலையில் கைது செய்யவில்லை. மேலும் அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.