மெக்சிகோ நாட்டிலுள்ள கப்பற்படை கப்பல் ஒன்று அமெரிக்காவின் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 150 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் சுமார் 200 கப்பற்படை வீரர்களுடன் நியூயார்க் நகரில் நுழைந்தது.

 

அப்போது திடீரென கப்பல் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் புரூக்களின் பாலத்தின் மீது மோதியது. இதில் 34 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 270க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.