
துபாயின் இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் துணையும் பாதுகாப்புத் துறையினரின் அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் மொஹம்மட் பின் ரஷித் அல் மக்தும், துபாயில் உள்ள கூகுளின் பிராந்திய தலைமையகத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவில் (AI) மேற்கொள்ளப்படும் வளர்ச்சிகளையும், நவீன முயற்சிகளையும் நேரில் பார்வையிட்டு, கூகுள் மேலாளர்களுடனும் ஊழியர்களுடனும் நேரில் உரையாடினார்.
“இன்று நான் துபாயில் உள்ள கூகுள் அலுவலகங்களை பார்வையிட்டேன். அவர்களின் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை ஆராய்ந்தேன்,” என அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார்.
Today, I visited Google’s Dubai offices, where I explored their latest artificial intelligence initiatives. We take pride in our longstanding partnerships with global technology leaders who have chosen Dubai as their regional hub. We remain committed to strengthening these… pic.twitter.com/wqBcDDbp35
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) May 12, 2025
இத்தகைய தொழில்நுட்ப கூட்டாண்மைகள், துபாயை உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார மையமாக வலுப்படுத்தும் எனவும், “Dubai Economic Agenda D33” எனப்படும் வளர்ச்சி திட்டத்திற்கு வலு சேர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.