
ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் ஜே நார்த். இவருக்கு 73 வயது ஆகும் நிலையில் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். இவர் குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமான நிலையில் Dennis the menace என்ற பிரபலமான தொடரில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தி சிம்ப்சன்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தன்னுடைய அசாத்திய திறமையால் கால் நூற்றாண்டு ஹாலிவுட் சினிமாவை கலக்கியவர். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.