
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் தமிழில் மாரி 2, என்ஜிகே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் மிகப் பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி கல்லூரியில் படிக்கும்போது நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான செயலாக்கி ஜவானி என்ற படத்தில் இடம்பெற்ற டீஸ் மார் கான் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நடிகை சாய் பல்லவியுடன் சேர்ந்து மற்றொரு பெண்ணும் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை தற்போது நடிகை சாய் பல்லவியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
#SaiPallavi in
Sheela ki Jawani Song at her College Fest 🥵🥵🥵🥵🥵 pic.twitter.com/0bA6zIb0Rr— Prabu (@prabumuthiyalu) April 16, 2024