
பாலிவுட்டில் மூத்த நடிகர் சதீஷ் கௌசிக் மரணமடைந்ததாக அனுபம் கேர் அறிவித்துள்ளது. இவருக்கு வயது 67. இவர் மரணம் தொடர்பாக அனுபம் கேர் வெளியிட்டுள்ள twitter பதிவில், எங்களுடைய 45 ஆண்டுகால நட்பு முடிவுக்கு வந்தது என்ற உருக்கமாக கூறியுள்ளார். முன்னணி காமெடி நடிகராக வளம் வந்த சதீஷ் கௌஷிக், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களையும் அவர் இயக்கியும் உள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.