இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து  முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு போதிய அளவு நிதி இல்லாததால் டெல்லியில் ஒரு இசை கச்சேரி நடத்தி அதன் மூலம் நிதி திரட்ட பிசிசிஐ முடிவு செய்தது.

இதற்காக பாடகி லதா மகேஷ்கரிடம் அப்போது பிசிசிஐ உதவி கேட்டது. உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவித்தால் லதா மங்கேஷ்கர் அதற்காக சம்பளமே பெறாமல் இசைக்கச்சேரியில் கலந்துகொண்டு பாடினார். இதன் மூலம் பிசிசிஐ ரூ.20 லட்சம் நிதி திரட்டியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிசிசிஐ அவருக்கு ஒரு பரிசு கொடுத்தது. அதாவது உலகில் உள்ள எந்த நாட்டில் இந்திய அணி விளையாடினாலும் அந்த மேட்சை பார்ப்பதற்கு இலவச பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் லதா மங்கேஷ்கர் தான் உயிருடன் இருக்கும் வரை ஒரு முறை கூட அந்த பாஸை பயன்படுத்தியதே கிடையாது.