
தென்கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் நிறுவனம் ஒன்று உலகம் முழுவதும் தங்களுடைய நூடுல்சை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் உள்ள காரம் மற்றும் சுவை காரணமாக உலகம் முழுவதும் பலரால் இந்த நூடுல்ஸ் விரும்பி வாங்கப்படுகிறது. இதற்கு தற்போது டென்மார்க் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது அதிக கார சுவை கொண்ட நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் இருப்பதாக அந்நாட்டு உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. காப்சைசின் என்பது கார சுவைக்கு வித்திடும் இயற்கையான கூட்டுக் கலவையாகும். இது அதிக அளவில் சேர்க்கப்பட்டதால்தான் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதற்கு தடை விதித்துள்ள அரசாங்கம் யாராவது அதை வைத்திருந்தால் உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நூடுல்சை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அந்த நிறுவனத்திடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.