இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவருடைய மனைவி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பாலிவுட் சினிமாவால் கொண்டாடப்படும் ஜோடியாக அனுஷ்கா மற்றும் விராட் தம்பதி இருக்கும் நிலையில் தற்போது ஒரு கவர்ச்சி நடிகையின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் செய்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை அவ்நீத் கவுர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவிற்கு விராட் கோலி லைக் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விராட் கோலி என்ன இது என்று உடனடியாக டேக் செய்து பதிவிட அவர் அன்லைக் செய்துவிட்டார். பின்னர் இது தொடர்பாக விளக்கம் கொடுத்த விராட் கோலி, இதை பெரிது படுத்த வேண்டாம். என்னுடைய பதிவில் தேவையில்லாததை நீக்கும் போது தவறுதலாக கைபட்டு லைக் போட்டு விட்டேன். எனவே தேவையற்ற வியூகங்களுக்கு வழிவகுக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் உங்களுடைய புரிதலுக்காக நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.