தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவுக்கு தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக இருக்கிறார்.

இந்த இரு நிறுவனங்களும் ஒரே இடத்தை பலருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அந்த சோதனையில் அந்த இரு நிறுவனங்களின் விளம்பர தூதராக மகேஷ் பாபு இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனங்கள் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் நிலையில் தகுதியே இல்லாத வீடுகளை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததால் தற்போது மகேஷ் பாபுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிப்பதற்காக மகேஷ்பாபு 5.90 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் இதன் காரணமாக வருகிற 27ஆம் தேதி நேரில் ஆஜராகி மகேஷ்பாபு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.