
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அமீர்கான். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2022 ஆம் வருடம் நடித்த லால்சிங் சத்தா படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. இதனால் மன வேதனை அடைந்த அவர் தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுப்பதாக அறிவித்தார். இதன் காரணமாக அமீர் கான் இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து கடந்த 2023 ஆம் வருடம் சித்தாரே ஜமீன் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து லாகூர் 1947 என்ற படத்தையும் தயாரித்தார்.
இந்நிலையில் அமீர் கானின் தாயார் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.