
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருந்தவர் முருகன் என்ற மொக்கைச்சாமி தற்போது காலமானார். இவர் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு தற்போது 78 வயது ஆகும் நிலையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். மேலும் இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.