
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஹீரோவாக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் sk23 படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட பட பிடிப்பானது இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடங்கியுள்ளது.
இந்த படத்துக்காக ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களை கொண்ட படக்குழு இலங்கை சென்றுள்ளது. அங்கு இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யாவை சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்த புகைப்படங்கள் ஆனது தற்போது இணையத்தில் வெளியாகிய கவனம் ஈர்த்துள்ளது.
#RaviMohan met Sri Lankan Cricketer #SanathJayasuriya at #ParaSakthi shooting spot 💥👌 pic.twitter.com/bxHJ66N1d8
— VCD (@VCDtweets) March 23, 2025