நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதன்பிறகு இன்று நரேந்திர மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் நிலையில் இன்று இரவு 7:30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்ப விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் உலகத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொள்கிறார்கள். இதனால் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் மற்றும் பாரா க்ளைடிங் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதோடு இன்று மற்றும் நாளை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.