உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவிலிருந்து பரவி வரும் ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் ஏசி பெட்டியில் புற்கா அணிந்த ஒரு பெண், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்து மற்றொரு பயணியின் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

பயணச்சீட்டை கேட்ட டிக்கெட் பரிசோதகர் (TTE) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) ஆகியோரிடம் அந்த பெண்  கோபத்துடன் பதிலளித்ததோடு, அனாகரிகமாக நடந்து கொண்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

வீடியோவில் RPF அதிகாரி ஒருவர், “மேடம், உங்கள் டிக்கெட்டை காண்பியுங்கள். இது உங்கள் இடம் அல்ல,” என்று கூற, அந்த பெண், “நான் யாரு என்று பிரதமரிடம் போய் கேளுங்க. நான் டிக்கெட் காட்டமாட்டேன்!” என பதிலளிக்கிறார். பின்னர், அந்த பெண் சில பயணிகளை மிரட்டியதோடு, ஒருவரிடம் “ஜாஸ்தியாக பேசினா துண்டு துண்டாக வெட்டிவிடுவேன்” எனக் கூறும் காட்சியும் வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.

இச்சம்பவம் பெட்டியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, மற்ற பயணிகள் அனைவருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.