இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்படி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவருடன் 72 பேர் மந்திரிகளாக ‌ பொறுப்பேற்று கொண்டனர். இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடிக்கு தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அதன்படி அவர் மீண்டும் 3-வது முறை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.