
தமிழகத்தில் ஆயிரம் கருணாநிதி வந்தாலும் அழிக்க முடியாத அதிமுகவை அண்ணாமலை அழித்து விட முடியுமா? அண்ணாமலை மட்டுமல்ல பின்லேடனே வந்தாலும் பாஜக வெற்றி பெறாது எனவும் 2026 மட்டும் அல்ல 2031, 2036, 2041 எந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றால் சரியான வாதம். 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு வாக்கு சதவீதம் அதிகரித்ததாக அண்ணாமலை கூறுகின்றார். எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜக வாக்கு சதவீதம் எப்போதுமே அதிகரிக்காது என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.