
குஜராத்தில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ராகுல் கரம்வீர் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது இந்த வாலிபர் இதுவரை குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடக மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை 5 பேரை கொலை செய்துள்ளார். இதில் 4 பேர் பெண்கள். இந்தப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது.
இவர் ரயிலின் மாற்றுத்திறனாளி பெட்டிகளை மட்டும் குறி வைத்து பெண்களை கற்பழித்து கொல்வார். இவர் ஓடும் ரயில்களிலும் ரயில்வே பிளாட்பார்ம்களிலும் படுத்து தூங்குவதால் காவல்துறையினருக்கு அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பல மாநில காவல்துறையினர் உதவியோடு ராகுலை குஜராத் போலீசார் வலைவீசி தேடிய நிலையில் 2,100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் இதைத் தொடர்ந்து ராகுல் பிடிபட்டார்.
இதில் குஜராத்தில் ரயில் தண்டவாளத்திற்கு கீழே கிடந்த அந்த 19 வயது பெண் சம்பவ நாளில் செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த நிலையில் தன்னை பார்த்து தான் அந்த பெண் சிரித்தார் என்று நினைத்து அவரை பலாத்காரம் செய்து கொன்றதாக வாலிபர் கூறினார். இவர் கொலை செய்த பிறகு ரயில்வே நிலையத்தில் அந்த பெண் போன்று உடை அணிந்து சாப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் சிசிடிவி கேமராவில் சிக்கினார். இவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அவர் உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் வந்து சடலத்துடன் உடலுறவு வைத்துள்ளார். பின்னர் அங்கு ஆள்கள் நடமாட்டம் அதிகமானதால் தன்னுடைய பேக்கை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். மேலும் இதையடுத்துதான் அவர் போலீசிடம் பிடிபட்டார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.