
ஒடிசா மாநிலம் பரலாகேமுண்டி மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபரின் மனைவி கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த நபர் மன உளைச்சலில் இருந்தார்.
இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். மனைவி இறந்த துக்கத்தில் பிள்ளைகளை பார்க்க முடியாமல் கணவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று அவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் அதனை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் 7 வயது மகன் இறந்ததாக கூறிவிட்டனர்.
தந்தைக்கும், மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.