பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் தான் விஜே மகேஸ்வரி இவருடைய தீவிர முயற்சியின் காரணமாக முன்னணி தொகுப்பாளராக உருவெடுத்தார். இவர் பிக் பாஸ் சீசன் 6 இல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் அதீத மாற்றம் இருந்த காரணத்தினால் சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து இவர் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஏடிகே மற்றும் ராமோடு இணைந்து வீட்டில் பிரியாணி செய்யும் வீடியோ காட்சியை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றாலும் இவர்களுடைய நட்பு இன்னும் தொடர்ந்து வருகிறதா? என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

https://youtu.be/iLSip6vwghI