
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சீசனை விட இந்த சீசன் மிகவும் பரபரப்பாகவும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது 91 நாட்களைக் கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வழக்கம்போல 14 வது வாரத்தில் பணம் பெட்டியை எடுத்துக்கொண்டு ஒருவர் வெளியேறலாம். இந்த வாரம் மற்றவர்களை முந்தி நடிகை விசித்ரா 13 லட்சம் இருந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது.