பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் முத்துக்குமரன் டைட்டிலை  வென்றார். சௌந்தர்யா ரன்னராக வந்தாலும் மக்கள் மனதில்  இடம் பிடித்தஇதில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் ஜாக்குலின். அவர் நிகழ்ச்சியின் இறுதி  வரை  வந்தாலும் பணப்பெட்டியை எடுக்கும் டாஸ்க்கில் கலந்துகொண்டு ஷோவிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்று விட்டார்.

ஆனாலும் ஜாக்குலிக்கு அதிக ஆதரவு கிடைத்தது. பைனல் செல்லவில்லை என்றாலும் அவருக்கு பாராட்டுகளுக்கும் கிடைத்தது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜாக்லின் அவருடைய காதலரின் போட்டோவை வெளியிட்டுள்ளார். யுவராஜ் செல்வநம்பி என்பவரை தான் அவர் காதலிக்கிறாராம். அவர் கேமரா மேனாக பணியாற்றி வருகிறாராம். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.