உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய  ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வருணேஷ் துபே மீது, அவரது மனைவி சிம்பி பாண்டே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அந்த தம்பதியரின் வீட்டிலேயே அவரது கணவர் திருநங்கை மாதிரியான தோற்றத்தில் பிகினி அணிந்து, மற்ற ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு ஆபாச வீடியோக்களை படம்பிடித்து, அவற்றை ஆன்லைன் தளங்களில் பணத்திற்காக விற்பனை செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கஙமே 18-ம் தேதி, கோரக்பூரில் உள்ள வீட்டில் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு சிம்பி தனது கணவரிடம் இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் கடுமையாகக் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிம்பியின் தந்தை மற்றும் சகோதரர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மருத்துவரை நேரடியாக எதிர்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீடு முழுவதும் இருந்த சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, போலீசார் மருத்துவர் துபேவின் வீட்டை சீல் வைத்து, தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நடத்தி வருகின்றனர். இவருக்கு எதிராக துரோகம், உடலுறவு வன்முறை மற்றும் மனதளவிலான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடங்கிய FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே சமயம், மருத்துவர் துபே தனது மீது எழுந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார். இந்த வீடியோவில் அவர் இல்லை என்றும், டீப் ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தி தனது பெயரை மாசடையச் செய்ய முயற்சி நடக்கிறது என்றும் கூறியுள்ளார். இது ஒரு பெரிய சதியாக இருக்கும் எனும் சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்

. “என் மனைவியுடன் நன்கு பழகும் தொழில்நுட்ப அறிவுடைய சில உறவினர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம்” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது, இந்த வழக்கு சமூக வலைதளங்கள் முதல் நிர்வாகம் வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஒரு மரியாதைக்குரிய மருத்தவரின் இரட்டை முகம் வெளிப்படுவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய மனைவி தன் கணவர் பிகினி அணிந்து மற்ற ஆண்களுடன் உடலுறவு கொள்வதாக பரபரப்பு புகாரினை முன்வைத்துள்ள நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது.