நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அப்பகுதி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப நிலையை அறிய 1800115526 அல்லது 155261 என்ற எண்ணின் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.