மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டம் தான் பிஎப் என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு திட்டமாகும். இந்த திட்டமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. EPFO ( Employee Provident Fund organisation) என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில் பொருளாதார சிரமமும் இல்லாமல் வாழ்வதற்கு இந்த திட்டம் பெரிதும் பயன்படுகிறது.

இந்த நிலையில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லையல்டி கம் லைஃப் திட்டத்தின் மூலமாக ஐம்பதாயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது அதே பி எப் கணக்கில் பங்களிக்க வேண்டும். இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு ஒரே pf கணக்கில் பங்களித்த பிறகு இந்த திட்டத்தின் பலன்களை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.