
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967ஆம் ஆண்டு படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் குடிமக்கள், வெளிநாட்டில் குடியேறிய பிறகு இந்திய பாஸ்போர்ட்டை 3 ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும். இதனை 3 ஆண்டுகளுக்குள் ஒப்படைத்தால் அபராதம் ஏதுமில்லை. இல்லையென்றால் ரூ. 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் கடந்த சில ஆண்டில் வெளிநாட்டில் குடியேறி, பாஸ்போர்ட்டை ஒப்படைத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகின்றது.
இதேபோன்று 3 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தை சேர்ந்த மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர். இவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறியவர்கள், அவர்களது படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள். அவர்கள் அங்குள்ள கட்டமைப்பு வசதி, வாழ்க்கை தரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு குடியேறுகிறார்கள். இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன், குஜராத்தில் குடியேறிய மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒப்படைத்தனர். ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை இரு மடங்கானது. மேலும் இந்த ஆண்டின் மே மாதத்துக்குள் 200-க்கும் மேற்பட்டோர் ஒப்படைத்துள்ளனர்.