
நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து கண்காணிப்பு ஆய்வினை தொடங்கியுள்ளதாக FSSAI ஆலோசகர் சத்யன் கே. பாண்டா தெரிவித்துள்ளார். மொத்தம் 766 மாவட்டங்களில் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் எனவும் ஆய்வு குறித்து அறிக்கை வருகின்ற டிசம்பர் மாதம் உணவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.