கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா பகுதியில் ராதாமணி என்ற 25 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பாக குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ஹேமந்த் குமார் என்று பெயர் சூட்டினார். குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் அடிக்கடி பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்துள்ளது.

இவரது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினசரி குடித்துவிட்டு வருவதோடு குழந்தை அழுததையும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ராதா சம்பவ நாளில் தன்னுடைய தாயார் வீட்டில் குழந்தையுடன் தூங்கினார். அவரது வீட்டில் தாயார் ரேணுகாம்மா மற்றும் மாற்று திறனாளியான மூத்த சகோதரர் இருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் குழந்தை திடீரென பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்துள்ளது.

இதனால் குழந்தைக்கு மனநலம் சரியிருக்காது என்று நினைத்த ராதா கோபத்தில் கொதிக்கும் வெந்நீரில் போட்டு குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் அவர் குழந்தை அழுததால் மன அழுத்தத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.