
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வச் சாயல் என்பவர் தன்னை திருமணம் செய்து கொண்டு பலருக்கு இறையாக்க முயற்சித்ததாக அதிமுக எம்எல்ஏ வை சந்தித்து மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிராக தற்போது அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும்; தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.