புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து குற்றவாளிகளிடம் விசாரித்ததில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை ஈடுபட்ட போது உயிரிழந்து விட்டதாகவும் சடலத்தை சாக்குப்பையில் போட்டு கால்வாயில் வீசியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டு போஸ்கோ பிரிவு சேர்க்கப்பட உள்ளது.