
ராணுவ நடவடிக்கைகளுக்காக சீன விஞ்ஞானிகள் கொசு அளவுள்ள மிகச் சிறிய ட்ரோனை உருவாக்கி இருப்பதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தால் இந்த குட்டி மைக்ரோ டிரோன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் இரண்டு சிறிய இறக்கைகளும் இருபுறமும் இலை போன்ற அமைப்புகளையும் கொண்டுள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் மூலம் இந்த மைக்ரோ ட்ரோனை கட்டுப்படுத்த முடியும். தோராயமாக 1.3 சென்டிமீட்டர் நீளமுள்ள சிறிய ட்ரோன் ரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.
இவற்றை கண்காணிப்பு அல்லது உழவுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். அவசர காலங்களில் இடிபாடுகள் அல்லது குப்பைகளுக்கு இடையே ஊடுருவி தப்பி படைத்தவர்களை கண்டறியவும் இந்த ட்ரோன் உதவும். காற்று தரம் அல்லது நீரின் தரம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளை கண்காணிக்கவும் இதில் சென்சார்கள் பொருத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.