தமிழக மக்களின் அடிமட்ட சாமானியனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க நம்மவரின் கருத்தை வலுப்படுத்துவோம் என்ற வாசகங்களுடன் மக்கள் நீதி மய்யம் 7 ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கட்டாயம் திமுக கூட்டணியில் கோவை தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சுவரொட்டிகள் அனைத்தும் உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அமைந்துள்ளது. நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பிலும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி சொல்வேன் என்று கமல்ஹாசன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.