
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனரின் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலை நேற்று இரவு திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய உடல் நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மனோஜ்க்கு இரங்கல் தெரிவித்தார். இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகனே மனோஜ் மறைந்து விட்டாயே…! பாரதிராஜாவின் பாதி உயிரே பாதிப்பருவத்தில் பறந்துவிட்டாயே.. சிங்கம் பெத்த பிள்ளை என்று தெரியவைப்போம் வாடா வாடா.. என்று உனக்கு அறிமுக பாடல் எழுதினேனே.. சிங்கம் இருக்க பிள்ளை நீ போய் விட்டாயே.. உன் தந்தையை நான் எப்படி தேற்றுவேன்.. எனக்கு கடன் செய்ய கடமைப்பட்டவன் உனக்கு நான் கடன் செய்வது காலத்தின் கொடுமை டா என்று தகப்பனை தவிக்க விட்டு தங்கமே இறந்து விட்டாயே.. உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்..! என்று தெரிவித்துள்ளார்.