
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிக்கு சென்ற போது பாம்பு கடித்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவத்தால் சரி ஆகாது கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூறிய நிலையில் மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு நாட்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளனர். இதனால் விஷம் தலைக்கேறி அவர் உயிரிழந்துள்ளார்.