
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ நாளில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் திடீரென அத்துமீறி நுழைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மனோ அந்த பெண் குளித்துக் கொண்டிருந்ததால் எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அந்த பெண்ணிடம் அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பயந்து போன அந்த பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்து மனோ தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மனோகுமாரை கைது செய்தனர். மேலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரை இப்படி பெண்ணிடம் அத்துமீறியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.