
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் நேற்று நள்ளிரவு ஜெராக்ஸ் கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது மர்ம நபர்கள் சிலரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினராக இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு பட்டுக்கோட்டையில் வசித்து வந்தார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது சரண்யாவை கொலை செய்ததாக கூறப்படும் குற்றவாளிகள் போலீசில் சரணடைந்துள்ளனர். அதன்படி கபிலன், குகன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இதில் கபிலன் சரண்யாவின் கணவரின் முதல் கணவனின் மகனாவார். இதில் சரண்யாவுக்கும் இரண்டாவது திருமணம் தான். அவருடைய கணவர் இறந்துவிட்டதால் அவர் பாலன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்தான் அவரின் கணவரின் முதல் மனைவியின் மகன் சரண்யாவை கொலை செய்துள்ளார். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.