
தலைமை பொறுப்பிலிருந்து அண்ணாமலையை உடனடியாக மாற்ற வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைப்பதில் தலைமைக்கு மிகப்பெரிய சிக்கல் இருப்பதால் அதில் தான் டெல்லி தலைமை முழு கவனம் செலுத்தும் எனக் கூறுகின்றனர். அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அதில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து மாற்றம் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.