சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தார். இது குறித்து அவர் பேசும்போது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜகவுக்கு கன்னடம் தெரிவித்து ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது நாடு முழுவதும் பற்றி எரியும் நிலையில் ஜெயக்குமார் கூறிய கருத்து தான் என்னுடைய கருத்து என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

உலக அளவில் ஒரு அரசியல் தலைவர் இப்படி ஒரு பதிலை  சொல்லி நான் கேட்டது கிடையாது. அதன் பிறகு பாஜக கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு கொடுக்கிறது. இதன் மூலம் அவர்களுடைய கூட்டணி வலுவாக இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபோதும் வராது என்று கூறியுள்ளார்.