
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. அதன் பிறகு பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணியில் பிரிவு ஏற்பட்டதற்கு அண்ணாமலை மட்டும் தான் காரணம். அவர் அண்ணா, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் குறித்து குறை கூறி பேசிவிட்டார். அதிமுக கூட்டணியில் இருக்கும் போது நிச்சயம் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும். விலகிவிட்டால் அவ்வளவுதான்.
எனவே அண்ணாமலை அதிமுகவை குறை சொல்வதை விட்டுவிட்டு தன்னுடைய மாநில தலைவர் பதவியை கவனிக்க வேண்டும். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் 30 முதல் 35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் எல். முருகன் ஆகியோர் இருந்தபோது பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நன்றாகத்தான் இருந்தது. மேலும் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான் கூட்டணியில் பிரிவு ஏற்பட்டது எனவும் அவருடைய ஓவர் பேச்சு தான் அனைத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.