
கோயம்புத்தூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். அதாவது பாஜக திருப்பூர் மாவட்டம் முன்னாள் தலைவர் மங்களம் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வினித் குமார் உள்ளிட்ட பலர் பாஜக கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறும் நோக்கில் மாற்றுக் கட்சியினரை சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்கும் வேலையும் தொடங்கியுள்ளது. மேலும் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.