மதுரையில் நேற்று முன்தினம் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு அதிமுக முன்னால் அமைச்சர்கள் இருந்ததால் தற்போது திமுக கட்சியினர் இதற்கு கட்டணங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இது பற்றி பேசினார்.

அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 71 ஆயிரம் கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் நின்று வெற்றி பெற்ற பின் பேசட்டும். பாஜகவிற்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது. அண்ணா மற்றும் பெரியார் மட்டும் இன்றி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவையும் அண்ணாமலை வசை பாடியுள்ளார்.

அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அதிமுக அமர்ந்தது அடிமைத்தனம். நயினார் நாகேந்திரன் பச்சைத்துண்டுடனும் அண்ணாமலை காவித்துண்டுடனும் சுற்றுகிறார்கள். மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு தான். மேலும் அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட இருக்கிறோம் என்று கூறினார்.