
ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இது பெரியார் மண் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த பொதுக்கூட்ட விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாம் தமிழர் கட்சி பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல் எறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்ற நிலையில் இருக்கிறது. பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்தால் எங்களால் எதிர்வினை ஆற்ற முடியும். பெரியார் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகு சீமான் விமர்சனம் செய்வது ஏன்.?
சீமான் ஒரு ஈனப்பையன். பெரியார் பற்றி தவறாக பேசினால் எங்கே சோறு கிடைக்கும் என்று பாஜக தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு சோற்றுக்காக பெரியாரை அழுக்காக்குகிறார். திராவிட இயக்கத்தை பாஜக குறி வைப்பதற்கு காரணம் பெரியார் அதனை வழிநடத்தி சென்றதால் தான். ஒரே மேடையில் தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் ஆகியவற்றை பற்றி விவாதிக்க சீமான் தயாரா.? மேலும் திராவிடம் என்றால் உங்களுக்கு தாலாட்டு பாடும் குழந்தை போன்று தெரிகிறதா என்று கூறினார். சீமான் பாஜகவின் கைக்கூலி மற்றும் அடியாள். இதை நான் கடந்த பத்து வருடங்களாக சொல்லி வருகிறேன். மேலும் சீமான் முருகனை வைத்தும் அரசியல் செய்ய பார்க்கிறார் என்று கூறினார்.