
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாகுபலி தோற்றத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் வைரலாகி வருகிறது.
பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையி கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாகுபலி வேடத்தில் முன்னாள் கட் அவுட் வைத்துள்ளனர்.
இதில், ‘தமிழக மக்களின் பாகுபலியை, கழக பொதுச்செயலாளர்’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.இந்த போஸ்டரை பார்த்த இணையவாசிகள் ரங்கசாமிக்கே டஃப் கொடுப்பார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆதரவாளர்கள் இதேபோல் பேனர் வைப்பதில் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.