
கர்நாடக மாநிலம் மங்களூரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியதாக கூறி மரமானவர்கள் அஸ்ரப் என்ற வாலிபரை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அஷ்ரப் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியதாக கூறி குடுப்பு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் டி.சச்சின் தலைமையில் மர்ம நபர்கள் அஷ்ரப்பை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் படுகாயம் அடைந்த அஷ்ரப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மைதானத்தில் விட்டு விட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஷ்ரப்பின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் மற்றும் உடம்பில் ஆழமான காயங்கள், உட்புற ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அஷ்ரப் இறந்தது உறுதியானது. இந்த சம்பவத்தில் 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.