
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ட்ரோன் உபகரணங்களை அனுப்பியதோடு, துருக்கி கடற்படையின் போர் கப்பல்களையும் பாகிஸ்தானுக்காக கடலோரத்திற்கு அனுப்பியது.
இந்த நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. நான்கு நாட்கள் நீடித்த ராணுவ மோதலுக்கு பிறகு, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இந்தச் சூழலில், இந்தியா துருக்கியை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக, துருக்கியில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் மார்பிள், ஆப்பிள், மற்றும் பிற பொருட்களுக்கு எதிராக இந்திய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்திய சுற்றுலா பயணிகள் துருக்கிக்கான பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய விமான நிலையங்களில் பல ஆண்டுகளாக சேவை செய்துவரும் துருக்கியின் தரை சேவை நிறுவமான ‘Celebi’ தற்போது சர்ச்சைக்குரிய நிறுவனமாக மாறியுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணமாக, இந்தியா அந்த நிறுவனத்தின் சேவையை ரத்துச் செய்தது. இதன் விளைவாக, முழு நிறுவனத்திற்கும், குறிப்பாக அதில் பங்குகள் வைத்திருக்கும் துருக்கி அதிபர் எர்டோகனின் மகள் சுமயா எர்டோகனுக்கும், இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Istanbul பங்குச் சந்தையில் Celebi நிறுவன பங்குகள் 20% வீழ்ச்சி கண்டது. பங்கு விலை 2,224 லீராவாக கீழிறங்கியுள்ளது. இது இந்தியாவுடன் எதிர்மறையான உறவுக்காரணமாக ஏற்பட்ட பெரும் நஷ்டம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சூழலில், இந்தியா தனது பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைப்பாட்டை உறுதியாகக் காட்டியுள்ள நிலையில், துருக்கி எதிர்காலத்தில் தன்மையைக் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.