பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சவுரப் சர்மா, பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், லக்னோ என்.ஐ.ஏ. நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

கடந்த 2021ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் சவுரப் சர்மா கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு கொண்டு, இந்திய ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இந்த வழக்கில், நீதிமன்றம் சவுரப் சர்மாவின் செயல்கள் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது எனக் கண்டித்து, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.