
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களிடம் விளக்குவதற்காக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கர்னல் சோபியாவை பாகிஸ்தானின் மகள் என்று பாஜக அமைச்சர் ஒருவர் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா, பஹல்காமில் நம்முடைய மகள்களின் நெற்றி குங்குமத்தை அழித்தவர்களை அழிப்பதற்காக அவர்களுடைய சகோதரியையே பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். நீங்கள் எங்கள் சகோதரிகளை விதவையாக்கினால் உங்கள் சகோதரிகளை வைத்தே உங்களை அழிக்க வைப்போம் என்று அவர் கூறியிருந்தார்.
नीच, कायर, देशद्रोही‼️
ये बेशर्म आदमी मध्यप्रदेश की BJP सरकार का मंत्री विजय शाह है।
हमारी सेना की बहादुर जांबाज देशभक्त कर्नल को आतंकवादियों की बहन बता रहा है।
हिन्दुस्तान की जिन बेटियों पर हमें नाज़ उनके लिए ये जाहिल भाजपाई मंत्री के ऐसे बोल कतई बर्दाश्त नहीं किया जाएगा। pic.twitter.com/WFHEEBVmk7
— AamAadmiPartyUPMedia (@MediaCellAAPUP) May 13, 2025
அதாவது கர்னல் சோபியாவை விமர்சித்ததாக காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதில் சோபியாவின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றிய நிலையில் அவருடைய கணவர் மெக்கானைஸ்டு காலால் படை பிரிவு அதிகாரியாக இருக்கிறார். ஒரு ராணுவ குடும்பத்தில் இருந்து வந்த அதிகாரியை பற்றி இப்படி அமைச்சர் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது அவர் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் தான் பேசிய கருத்து தவறு என்று ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பு கோரி உள்ளார்.